He is my strength

 

என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பி உள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை

என் கால்கள் சருக்கிடும் போதெல்லாம் தாங்குதைய்யா உம் கிருபை
நான் அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதைய்யா உம் கிருபை – என்னை

நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேனே
உங்க கோலும் தடியும் தேற்றுதைய்யா
அனுதினமும் வெற்றிப்பாதை காட்டுதைய்யா – எனக்கு

என் உள்ளம் கலங்கிடும் போதெல்லாம் தேற்றுதைய்யா உம் கிருபை
நான் நம்பிடும் தேவன் நீர்தானய்யா
வென்றிடுவேன் உம் நாமத்தினால் – நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *